உணவு நலம் - இயற்கை உணவு - Healthy Foods

ரோஜா குல்கந்து
குண நலன்கள்

பூக்களின் ராணி ரோஜா தான். அதன் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவரும். காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதும் ஒற்றை ரோஜா தான். ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது.

பல வித வண்ணங்களில் கிடைக்கும் ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கி, கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்க என்று நீளும் ரோஜாவின் மருத்துவ பயன்களைப்பற்றி தனியாகவே எழுதலாம். இங்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் “குல்கந்து” டானிக்கைப் பற்றி பார்ப்போம். குல்கந்து கடைகளில் கிடைத்தாலும், நாமாகவே வீட்டில் தயார் செய்து கொள்வது உத்தமம். பல கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து கிடைப்பது கடினம்.

வீட்டிலேயே தயாரிக்கும் முறை

முறை 1

சிவப்பு ரோஜா இதழ்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். பல ரக ரோஜாப் பூக்கள் கிடைத்தாலு, குல்கந்து செய்ய சாதாரண ஒரிஜினல் ரோஜா விதை ஸிஷீsணீ சிமீஸீtவீயீஷீறீவீணீ என்ற ரகப் பூக்கள் தான் பொதுவாக பயன்படுகின்றன. நல்ல, தரமான, நிறமுடைய நன்கு பூத்த, பெரிய பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.

இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.

இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

நன்றாக லேஹிய பக்குவம் வரும் வரை இடிக்கவும்.

இந்த லேகியத்தை ஒரு வாயகன்ற பீங்கான் / கண்ணாடி ஜாடியில் போடவும்.

ஜாடியில் போட்ட லேகியத்தின் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.

குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

முறை 2

இந்த முறையில், சுத்தம் செய்யப்பட்ட இதழ்களுடன், அதே அளவு சர்க்கரை சேர்த்து, வாயகன்ற ஜாடியில் வைக்கவும்.

இந்த ஜாடியை தினமும் வெய்யிலில் 6-7 மணி நேரம் வரை 3 அல்லது 4 வாரங்கள் வைத்து வரவும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள், மரக்கரண்டியால், ஜாடியில் உள்ள சர்க்கரை + இதழ்களை நன்கு கிளறி விட வேண்டும்.

மூன்று / நான்கு வாரங்கள் கழிந்த பின், எடுத்துக் கொண்ட ரோஜா இதழ்களில் எடையில் 8 ல் 1 பாகம் எடை அளவில் பவழம் அல்லது முத்தின் களிம்பை சேர்க்க வேண்டும். இந்த களிம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

கூடவே 8 ல் 1 பங்கு எடையில், ஏலக்காய் பொடி, வெள்ளி ரேக்கு (ஷிவீறீஸ்மீக்ஷீ யீஷீவீறீ) சேர்க்கலாம்.

இவற்றை சேர்த்த பிறகு ஜாடியை வெய்யிலில் வைக்க வேண்டாம். நன்றாக கிளறி, குல்கந்தை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

அளவு:- சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை மாலை சாப்பிட்டு வரலாம்.

குல்கந்தின் பயன்கள்

1. உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது.

2. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

3. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

4. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கிறார்கள் போலும்!

5. மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

6. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் – மருந்து

7. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

உணவு நலம் டிசம்பர் 2011

வளர்சிதை மாற்றம் (Metabolism)
டயாபடீஸ்ஸை metabolism கோளாறு என்கிறோம். metabolism என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் சீரண மண்டல இயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லாவித இயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில் உண்ணுகிறோம். நாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் சரி, “கையேந்தி” பவன்களில் சாப்பிட்டாலும் சரி, இல்லை வீட்டில் சாப்பிட்டாலும் சரி, நம் உடல் நாம் சாப்பிடும் உணவை புரிந்து கொள்ளாது, அதற்கு தயிர் சாதமும் ஒன்று தான், மட்டன் பிரியாணியும் ஒன்று தான். அதற்கு தெரிந்த தெல்லாம், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை தான்.

நாம் உணவு உண்பது எதற்காக? உடல் வளர்ச்சிக்காக, உடல் உறுப்புகள் சரிவர, சுறு சுறுப்பாக இயங்க, உடலை பாதுகாக்க, உடல் வலிமைக்காக, சுருக்கமாக சொன்னால் உயிருடன் வாழ உணவு தேவை. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப்பொருளை சர்க்கரையாகவும், புரதத்தை அமினோ அமிலமாகவும், கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகவும் (Glycerol) கிளிஸராலாகவும் மாற்றப்படுகின்றன. இதற்கு வயிற்றில் உண்டாகும் ஜீரணத்திரவங்கள் (Gastric juices), கல்லீரலால் உண்டாகும் பித்த நீர் (Bile), கணையம் தயாரிக்கும் என்ஸைம்களும் உதவுகின்றன.

மாவுப்பொருட்கள் (Starch, Carbohydrates) மூன்று ரக சர்க்கரைகளாக மாற்றப்படுகின்றன. அவை

1. ஒற்றை சர்க்கரை (Mono – Saccharide) - இவை பழங்கள், பால் சார்ந்த உணவுகள், தேன், அத்திப்பழம் இவற்றிலிருந்து கிடைக்கும் Fructose. பழச்சர்க்கரை எளிதில் ஜீரணமாகி உடனே ரத்தத்தில் கலக்கும்.

2. இரட்டை சர்க்கரை -(Di – saccharide) இரண்டு மானோ சாக்ரைடுகள் சேர்ந்தவை. மால்டோஸ் (Maltose), லாக் டோஸ் (Lactose) மற்றும் சுக்ரோஸ் (Sucrose). மால்டோஸ், முளைகட்டிய தானியங்களிலிருந்து கிடைப்பது. லாக்டோஸ் பாலில் இருந்து கிடைப்பது. சுக்ரோஸ், கரும்பு, சர்க்கரை பீட்ருட்டிலிருந்து கிடைப்பது. இந்த  direct சர்க்கரையான சுக்ரோஸ் கடந்த 50 வருடங்களில் அதிகமாக உட்கொள்ளபடுவதால், பற்கள் சிதைவு, டயாபடீஸ், உடல்பருமன், இருதயநோய், இவை அதிகமாகி விட்டன.

3. பல சர்க்கரை (Poly – Saccharides) - இது அரிசி, கோதுமை, கேழ்வரகு, கிழங்குகளிலிருந்து கிடைக்கும். இது கல்லீரலில் க்ளைகோஜன்(Glycogen) என்ற சர்க்கரையாக சேமித்து வைக்கப்படுகிறது.

தசைகளும் Glycogenஐ சேமித்து வைக்கும். இந்த மாதிரி சேமித்து வைக்கப்பட்ட Glycogen ஒரு நாள் கலோரி தேவைக்கு போதுமானது.

இந்த மாதிரி மாற்றப்பட்ட சர்க்கரை சக்தியை உடலெங்குமுள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு செல்வது ரத்தத்தின் கடமை. பொறுப்பாக இந்த சக்தியை ரத்தம் மாத்திரம் கொண்டு சென்றால் அதை செல்கள் ஏற்காது. ரத்தத்துடன் கூட, செல்களுக்கு அறிமுகமான ஒரு ஹார்மோன் உதவியாளர் தேவை. இந்த உதவியாளர் தான் ‘இன்சுலின்’ செல்கள் ஏன் ரத்தத்தை மட்டும் அனுமதிப் பதில்லை?

உடல் செல்கள் membrane எனப்படும் சவ்வால் – சருகால் மூடப்பட்டவை இந்த membrane கள் வெறும் “பை” அல்ல. Receptors எனும் புகு வாய்களை கொண்டவை. இவை பிற செல்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமை வாய்ந்தவை. யாரை உள்ளே விடுவது யாரை உள்ள விடக்கூடாது என்று தெரிந்தவை.

எதற்காக இந்த பாதுகாப்பு? உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் செல்கள் உள்ளன. இவை அந்தந்த அவயத்திற் ஏற்ப பிரத்யேகமானவை. இவை வேறு அவயங்களுக்கு சென்று விட்டால் குழப்பம் தான். உதாரணமாக தலை முடி செல் கண்ணுக்குள் புகுந்து விட்டால், கண்களிலிருந்து முடி வளரும்!

எனவே ரத்தம் தனியாக செல்களை அணுகி, க்ளுகோஸை தள்ளி விட முடியாது. கூடவே செல்லும் இன்சுலின் தான் திறவுகோல். சாவி பூட்டைத் திறப்பது போல், இன்சுலின் உடல் செல்களுடன் ஒட்டி இணைந்து, “தாள் திறவாய்” என்று செல்லின் அனுமதியுடன் குளுகோஸை செல்லுக்குள் செலுத்த உதவும்.

எனவே தான் இன்சுலின் குறைந்தாலோ அல்லது நின்று விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை தேங்கிவிடும்.

உணவில் உள்ள கார்போஹைடிரேட் சில மணி நேரங்களிலேயே ஒற்றை சர்க்கரையாக மாற்றப்படும். இந்த ஒற்றை சர்க்கரை ரத்தத்தில் காணப்படும் மற்றும் எரிசக்தியாக உடலுக்கு உதவும். சில கார்போஹைடிரேட்டுகளை மாற்றுவதில்லை. இவை பழச்சர்க்கரை. இவை நேரடியாக செல்களின் எரி பொருளாகின்றன. இவை குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. எனவே திக்ஷீuநீtஷீsமீ இன்சுலின் / குளூக்கோஸ் சமாசாரங்களில் பங்கெடுப்பதில்லை. சம்மந்தப்படுவதுமில்லை. தவிர செல்லுலோஸ் எனப்படும் மாவுச்சத்தும் குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. காரணம் இவற்றை நம் உடல்களால் மாற்ற இயலாது!

உணவு நலம் டிசம்பர் 2011

நார்சத்து நமது உயிர்சத்து
நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.

பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.

பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.

பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்

டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்

மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன

நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.

நார்சத்து என்றால் என்ன செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான், தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.

மலச்சிக்கலுக்கு மாமருந்து

நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது. இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம். இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல. எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல. அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை. இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை. மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.

உணவு நலம் நவம்பர் 2011

சிக்கரி
காப்பியின் நண்பன் சிக்கரி

சிக்கரி என்பதை எல்லோரும் அறிந்துள்ள காரணம், அதற்கும் காப்பிக்கும் உள்ள தொடர்பால் தான். காப்பியுடன் கலந்தும், காப்பிக்கு பதிலாகவும், தனியாகவும் சிக்கரி பயன்படுகிறது. காப்பி பானத்திற்கு சிக்கரி ஒரு வித கசப்பை உண்டாக்குகிறது இந்த ருசி பலருக்கு பிடித்தமானது.

சிக்கரி பழைய நூல்களில் குறிப்பிடப்பட்ட தொன்மையான தாவரம். ஃபிரான்னால் நெப்போலியன் ஆண்ட போது, காப்பிக்கு மாற்றாக, காப்பியில் கலப்படமாக சிக்கரி உபயோகிக்கப்பட்டது. அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் சிக்கரி செடியின் வேர் காப்பிக்கு பதிலாக உபயோகப்பட்டது. சிக்கரிவேர் ஜரோப்பாவிலும் காப்பிக்கு பதிலாக உபயோகிக்க சிக்கரி பயிரிடப்பட்டது. சிக்கரியை காப்பிக் கொட்டைகளுடன் கலந்து உபயோகிப்பது இந்தியாவில் பிரசித்தம். சிக்கரி 3 அடி வளரும் செடி. நீல நிறப்பூக்கள் உடையது பூக்கள் தினமும் ஒரே நேரத்தில் மலரும், மூடிக்கொள்ளும். இதன் வேர் நீளமாகவும், கெட்டியாகவும் இருக்கும். இந்த வேர்தான் காய வைக்கப்பட்டு, வறுத்து பொடியாக்கி, காப்பிக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது. காப்பியின் இருக்கும் காஃபின் சிக்கரியில் இல்லை. காப்பிக் கொட்டைகளை விட, வறுத்த சிக்கரியின் மணமும் சுவையும் இல்லை. காப்பியில் 30 சதவிகித சிக்கரியை கலப்பது காப்பிப்பொடி தயாரிப்பாளர்களின், வழக்கம். இதனால் நீங்கள் குடிக்கும் காப்பியின் காஃபின் அளவு குறைகிறது. சிலர் முழுச்சிக்கரி பொடியையே விரும்புகின்றனர். தவிர சிக்கரி காப்பியை விட தண்ணீருடன் நன்கு கலக்கும். இதனால் குறைந்த அளவு சிக்கரி உபயோகித்தால் போதும். காப்பியை விட சிக்கரி சிக்கனமானது.

பயன்கள்

காப்பிக்கு பதிலாக அல்லது கலந்து உபயோகிக்கலாம்.

இரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை ஆரோக்கியமாக்கும்.

இதன் இலைகள் சலாட் தயாரிக்க உதவும். ஃபிரான்ஸில் இது சலாடுகள் எனப்படும். பச்சையாகவே இலைகளை உண்ணலாம்.

வேர்கள் வேகவைக்கப்பட்டு, வெண்ணையுடன் உட்கொள்ளப்படுகிறது. காய்கறி போலவும் பயன்படும்.

பொடியாக்கப்பட்ட வேர்கள் டானிக்காக, சிறுநீர் சுலபமாக போக, மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படும். தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சிக்கரிப்பூ, ஜெர்மனியில் டானிக்காக, பசியை தூண்ட, பித்தப்பை கற்களை நீக்க, சைனஸ், வயிற்றுக் கோளாறு மற்றும் காயங்களுக்கும், பயன்பட்டு வந்திருக்கிறது.

இதில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்க வல்லது. இதனால் கால்நடை உணவுகளில் சிக்கரி பயன்படுகிறது. கால் நடை வயிற்றுப்பூச்சிகளை அழித்து விடும்.

1970 ல் சிக்கரி வேரில் 20% இன்சுலின் எனும் மாவுச்சத்து போன்ற கூட்டுசர்க்கரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பான முறையால் சிக்கரி செடிகள் பயிர்களில் இந்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் படியான புதிய ரகங்கள் உண்டாக்கப்பட்டன. இனூலின் செயற்கை சர்க்கரை உற்பத்தியில் பயன்படும். தவிர இனூலின் நார்ச்சத்து மிகுந்த பொருளாக பிரசித்தி பெற்று வறுகிறது.

சில பீர் தயயரிப்பாளர்கள் வறுத்த சிக்கரியை பீரின் சுவையை அதிகரிக்க உபயோகிக்கின்றனர்.

சிக்கரியை அதிகமாக காப்பிக்குபதில் உபயோகித்தால், கண்களின் பார்வை பாதிக்கப்படும் என்று பலர் கருதுகின்றனர். தற்போதை விஞ்ஞானத்தில், இந்த கருத்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

சிக்கரியில் கசப்பு பொருட்கள், கோலின், சர்க்கரை, இன்சுலின், பொட்டாசியம், கால்ஸியம் மற்றும் அயச்சத்து உள்ளன.

இதன் பொதுவான குணங்கள் – உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். பித்த நீர் சுரக்க உதவும். மிருதுவான மலமிளக்கி. வேகவைத்த வேரில் உள்ள இன்சுலின, ஸ்டார்ச்சசை விட, நீரிழிவு நோயாளிக்கு உகந்தது.

உணவு நலம் நவம்பர் 2011

குடசப்பாலை
சர்ம நோய்களுக்கும், சர்ம பராமரிப்புக்கும் தேவையான பல மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று குடசப்பாலை.

குடசப்பாலையின் இதர பெயர்கள் – வெட்பாலை, குளப்பாலை

குடசப்பாலை ஒரு சிறு மரம் அல்லது பெரிய செடி 12 (அ) 15 அடி உயரம் வளரும். மரத்தில் எந்த பாகத்திலும் சிறிது காயப்படுத்தினாலே, பால் கசியும் மரப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் 8 லிருந்து 24 செ.மீ. நீளமாகவும், 4 லிருந்து 10 செ.மீ. அகலமாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறிதளவு வாசனையுடன் இருக்கும். விதைகள் காற்றில் பரவுவதற்கு ஏற்றதாக பட்டுப்போன்ற முடிகளுடன் இருக்கும். இந்தியா முழுவதும் குடாஜ மரத்தை காணலாம்.

உபயோகமாகும் பாகங்கள் – பட்டை, விதை.

பயன்கள்

தாவரவியலின் பெயருக்கு ஏற்றபடி குடசப்பாலை பேதியை நிறுத்தும். பேதிக்கு நல்ல மருந்தாகும் குடசப்பாலை. மரப்பட்டை கஷாயம் இரு வேளை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சர்ம நோய்களுக்கு இதன் மரப்பட்டையை களிம்பாக அரைத்து பசுமாட்டு சிறுநீருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம்.

மரப்பட்டை கஷாயத்தை இஞ்சியுடன் சேர்த்துக் கொடுக்க, இரத்தம் கசியும் மூலநோயை கட்டுப்படுத்தலாம்.

குடசப்பாலையின் பட்டையை பொடியாக்கி, 1 ஸ்பூன் சந்தனப்பொடியை சேர்த்துக் குழைத்து பருக்கள், தழும்புகள் மேல் தடவினால் அவை மறையும்.

வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கவும் குடசப்பாலையின் விதைகள் உதவுகின்றன. உலர்ந்த விதைகளின் பொடியை 1/2 ஸ்பூன் தினமும் இரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

பட்டை சாற்றை எண்ணையிலிட்டு காய்ச்சி, கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சர்ம நோய்களுக்கு தடவ, அவை குணமாகும்.

பட்டையை குடிநீரிலிட்டு வாய் கொப்பளிக்க, பல் வலி நீங்கும்.

உணவு நலம் நவம்பர் 2011

அத்தி
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

அத்திப்பழம் இருவகைப்படும். சீமை அத்தி, என்பது எனவும் நாட்டு அத்தி என்பது எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

அத்தி பழத்தின் சத்துக்கள்

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம் – 4 கிராம், கால்ஷியம் – 200 மி.கி., இரும்பு – 4 மி.கி., வைட்டமின் – 100 ஐ.யு., தயாமின் – 0.10 மி.கி., கலோரி அளவு – 260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்து வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதப்பேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.

அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.

அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்து காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும்.

உணவு நலம் நவம்பர் 2011

அஞ்சறைப்பெட்டி
உலக சரித்திரத்தின் படி, அதிகமாக வெளிநாட்டினவர்களால் தாக்கப்பட்ட தேசங்களில் ஒன்று நமது பாரத தேசம். காரணம் பழங்காலத்தில் செல்வமும் செழிப்பும் செறிந்த நாடாக இருந்தது நமது இந்திய தேசம். அது மட்டுமல்ல, இந்தியாவில் விளையும் வாசனை திரவியங்களுக்காகவே கடல் வழி வர்த்தகமும், தாக்குதலும் நடந்து வந்தன.

இந்தியாவின் வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை. குறிப்பிட்ட வாசனை பொருட்கள் அடங்கிய அஞ்சனம் (அஞ்சறைப்) பெட்டி இல்லாத சமையலறையே கிடையாது எனலாம். இந்த பெட்டியில் அடங்குபவை – மிளகு, சீரகம், பெருங்காயம், கடுகு, வெந்தயம். இவை தவிர மஞ்சள் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி முதலியனவும் சமையலறையில் இருக்கும் வாசனைப் பொருட்கள். இவற்றினால் சாதாரண உடல் பாதிப்புகளை குறைக்க முடியும்.

மிளகு

இந்தியாவுக்கே உரித்த, இந்தியாவில் தோன்றிய பொருள். மிளகு ஒரு கொடி இனத் தாவரம். இது படர கொழு, கொம்பு, மரம் தேவை. இதன் பழங்களை உலர வைத்து கருமிளகும், வெண்மிளகும் தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத காய்களை உலர வைத்து கருமிளகும், பழுத்த பழங்களை நனைய வைத்து, மேல் தோலை நீக்கி, வெண் மிளகும் எடுக்கப்படுகின்றன. சரித்திர வரலாற்றின் படி, உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வாசனை திரவியம் மிளகு. வருடத்திற்கு 75,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில்  விளையும் மிளகுக்கு மதிப்பு அதிகம்.

பயன்கள்

உள்ளுக்கு மருந்தாக – மிளகு காரமும், கைப்பும் நிறைந்திருப்பதால், உள்ளுக்கு சூடு தரும். பசியை தூண்டி ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். உமிழ்நீரை சுரக்க செய்வதால், உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்தும். எனவே எல்லா வித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்து. வயிற்றுக் கோளாறுகளுக்கு, மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் இவை நன்றாக இயங்கும்.

ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் நல்லது. மிளகை நெய்யில் பொரித்து சாப்பிட வறட்டு இருமல் நிற்கும். ஊசி முனையில் மிளகை குத்தி, நெருப்பில் காட்டி, அதன் புகையை மூக்கினுள் செலுத்தி, உறிஞ்சினால், மூக்கடைப்பு நீங்கும்.

மிளகுப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் குறையும். வெல்லத்தை நீரில் கொதிக்க வைத்து எடுத்து குளிர வைக்கவும். தேனையும், மிளகையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை புண்ணுக்கு மிளகுத்தூள், மஞ்சள்தூள், தலா 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் பாலில் கலந்து குடிக்கலாம்.

முன் மண்டைத் தலைவலி, நீர்க்கோர்வை இவற்றுக்கு, மிளகு போட்டு காய்ச்சிய எண்ணெய்யை தேய்த்து, குளித்து, புளியில்லா பத்தியத்துடன் இருந்தால் நிவாரணம் கிட்டும்.

சர்மத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும், சீழ் வடிவதற்கும் மிளகுக் கஷாயம் நல்லது. தோலின் பல அலர்ஜி தடிப்புகளுக்கு மிளகை சாப்பிட்டு வரலாம்.

மிளகு விஷங்களை முறிக்கும்.

குளிருடன் கூடிய ஜுரத்திற்கு, மிளகு கஷாயம் குடித்தால் ஜுரம் தணியும்.

வெளி உபயோகத்திற்கு

சர்ம நோய்களுக்கு – மிளகை நீரில் அரைத்து அல்லது எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து களிம்பாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

பல் வலி, பல் கூச்சம், ஈறுவலி இவற்றுக்கு மிளகுப் பொடி சிறந்தது. பல் சொத்தையில் மிளகுப் பொடி.

மிளகு, வெங்காயம், உப்பு இவற்றை அரைத்து தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும்.

சீரகம்

இதன் பெயரை பிரித்தால் – சீர் + அகம் – உடலின் உட்புறத்தை சீராக வைக்கும் என்று பொருள் படும். சீரகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம். ஆனால் தொன்று தொட்டு இந்தியாவிலும் சீனாவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

சீரகச் செடி ஒரு சிறிய, 1/2 அடி வளரும் செடி. சீரகத்தில் 5 வகைகள் உண்டு. அவை – நற்சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கருஞ்சீரகம், காட்டு சீரகம் மற்றும் பளப்பு சீரகம். முதல் இரண்டு வகைகளும் சமையலில் பயன்படுத்தப்படுபவை. அடுத்த இரண்டும் மருந்துகளாக பயனளிப்பவை. கடைசி ரகம் காரம் நிறைந்த வெளிநாட்டு சரக்காகும்.

சீரகத்தின் வீட்டு மருத்துவ உபயோகங்கள்

உள்ளுக்கு – மிளகைப் போலவே வயிற்றை சீரகம் சீராக வைக்கும். பசியின்மை, பிரட்டல், வாந்தி, வயிறு உப்புசம் (கேஸ் – வாய்வு) மலச்சிக்கல், ஏப்பம், வயிற்றுப் பூச்சிகள் இவற்றை போக்கும்.

பசியெடுக்க – சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊற வைத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை பொடியாக்கி தேனுடன் (அ) சர்க்கரையுடன் கலந்து 5 கிராம் தினம் இரு வேளை சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். இதை வாந்தி நிற்கவும் கொடுக்கலாம்.

ஐந்து கிராம் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக்கவும். இதை வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால், மலச்சிக்கல் அஜீரணம், வாய்வுத் தொல்லை, இவை விலகும்.

குழந்தை பிறந்த பின், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க 1/2 டீஸ்பூன் சீரகம் தேன் (அ) வெல்லத்துடன் கொடுத்து வரலாம். வயிற்றுக் கோளாறுகளும் சீராகும். சீரகப் பொடியை பால் (அ) நெய்யுடன் கொடுத்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

ஐந்து கிராம் சீரகத்தால் செய்யப்பட்ட கஷாயத்தை தினம் இருவேளை, 10 நாள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட ஜுரம் குறையும். குளிர் ஜுரத்தில் ஏற்படும் நடுக்கத்தைப் போக்க 3 கிராம் சீரகத்தை வெற்றிலையில் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மெல்லவும்.

சீரகத்தை, இஞ்சி, தனியாவுடன் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் தீராத தலை வலியும் தீரும். அளவுகள் சீரகம், தனியா, தலா அரை டீஸ்பூன். இஞ்சி இரு சிறிய துண்டுகள். கஷாயம் தயாரிக்க தண்ணீர் ஒரு டம்ளர்.

வெய்யில் கால நீர்ச்சுருக்கு எரிச்சலை போக்க – ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் குடிக்கவும். சிறுநீரக கற்கள் நீங்க சீரகப் பொடியை சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

வெளிப்பூச்சுக்கு

சீரகத்தை பொடித்து களிம்பாக்கி முகத்தில் தடவ, முகம் பொலிவடையும். களிம்பை, தோல் வீக்கங்களுக்கும், வலிக்கும் இடங்களிலும் தடவலாம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகத்தை கழுவ, முகம் மாசு மருவின்றி பிரகாசிக்கும். அரிப்பு, நமைச்சல், இவற்றுக்கும் சீரகத் தண்ணீரை ஊற்றி கழுவலாம்.

பெருங்காயம்

பெருங்காய செடிகள் இமயமலை பிரதேசங்களிலும், காஷ்மீரிலும் விளைகின்றன. இதன் பெரிய வேர்கள் மேல் பாகத்தில் 6 அங்குல சுற்றளவு உள்ளவை. பெருங்காய செடி 4 – 5 வருடம் வளர்ந்த பின், இதன் தண்டு மற்றும் வேரையும் கீறி விட்டால் பெருங்காய பிசின் கசியும். அதை எடுத்து மண் பாண்டங்களில் பக்குவப்படுத்தி காய வைத்து கிடைக்கும் பொருள் பெருங்காயம்.

பயன்கள்

பெருங்காயத்தை ஒரு துணியில் கட்டி, வீட்டின் ஒரு மூலையில் கட்டி தொங்க விடுவது பழங்கால பழக்கம். இதன் வாசனை, வியாதிகளை விரட்டும் என்ற நம்பிக்கை.

உள்ளுக்கு

வாயுக் கோளாறுகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து. நெய்யில் வறுத்து கொடுக்க, பசி எடுக்கும், வயிறு உப்புசம் குறையும். வயிற்று வலி குறையும். வாயுத் தொல்லைக்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி உப்பை கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். ஜீரண சக்தியை தூண்டும். பெருங்காயப் பொடியை எண்ணையில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளோடு கலந்து விழுதாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை பெருங்காயம் போக்கும்.

ஆஸ்த்மா, தொடர் இருமல் பாதிப்புக்கு சிறிய அளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் வெங்காய சாறு, வெற்றிலைச் சாறு ஒரு டீஸ்பூன் – இவற்றை கலந்து குடிக்கலாம்.

சிறுநீர் சரியாக போகாவிட்டால், 5 கிராம் பெருங்காயத்தை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டால் சிறுநீர் சுலபமாக பிரியும்.

பெண்களின் மாத சுழற்சி கோளாறுகளை சீர் செய்கிறது.

ஆண்மை குறைபாடுகளுக்கு பெருங்காயம் ஒரு சிட்டிகை எடுத்து தேனுடனும், ஒரு டீஸ்பூன் ஆலமர பிசினுடன் கலந்து காலையில் தினமும் ஒரு தடவை வீதம் 40 நாட்கள் எடுத்து வந்தால் பலன் கிடைக்கும்.

குறிப்பு

வெளிப்பூச்சுக்கு

வாய்வுக் கோளாறு காரணமாக வரும் வயிற்று வலிக்கு – பெருங்காயப் பொடியை தண்ணீரில் கலந்து, சுட வைத்து வயிற்றில் தடவ, வலி குறையும்.

பெருங்காயம் + சுக்கு – சம அளவு எடுத்து, பொடித்து, தண்ணீரில் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை சூடாக்கி, இளம் சூட்டில் வலி இருக்கும் மூட்டுப் பகுதிகளில் தடவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்யவும்.

வெந்தயம்

வெந்தயம் சிறந்த மருத்துவ பயன்களை உடையது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீரையும் விதையைப் போலவே சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயனாகிறது. வெந்தய செடியின் விசேஷம் என்னவென்றால் தான் வளர்ந்த பூமிக்கு திரும்பவும் நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுள்ள தாவரம். ஒன்று (அ) இரண்டடி உயரம் வளரும்

பயன்கள்

அ. உள்ளுக்கு

நிறைந்த நார்ச்சத்து இருப்பதாலும், இதில் உள்ள லவணசாரம் என்ற பொருளால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதாலும், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. 10 (அ) 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 (அ) 10 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும். டயாபடீஸால் ஏற்படும் ஆண்மை குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், தனியா பொடி – 1 டீஸ்பூன் – சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும். வெந்தயத்தை முளை கட்டி உபயோகித்தால் பயன்கள் அதிகம். வெந்தயப் பொடியை 2 டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வருதல் நீரிழிவு நோயாளிக்கு நல்லது.

அசதி, களைப்பு, உடல் வலி, மறைய வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.

பசியை தூண்டும், வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறுகளுக்கு வெந்தயப் பொடி, பெருங்காயம் இரண்டிலும் 1/2 தேக்கரண்டி எடுத்து மோரில் கலக்கி குடிக்கலாம்.

உடல் சூடு, உடல் காங்கை குறைய இரவில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்து வரவும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு, மஞ்சள்பொடி கலந்த வெந்தய கஷாயத்தால் கழுவினால் குணமாகும்.

வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

தொண்டைப்புண், வாய்ப்புண்களுக்கு வெந்தய இலை விதைகளால் செய்த கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். தினம் 2 (அ) 3 முறை செய்யலாம்.

பிரசவித்த தாய்மார்களின் தாய்ப்பால் பெருக உதவும் அரிசியில் உளுந்து கலக்காமல், ஆறுக்கு ஒன்று என்ற அளவில் (அரிசி 6 பாகம், வெந்தயம் 1 பாகம்) வெந்தயம் அல்லது தோசை மாவு செய்து புளிக்க வைத்து அதில் தோசை வார்த்து தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.

இரண்டு தேக்கரண்டி வெந்தயம் (அ) சிறுகட்டு வெந்தயக்கீரையை அரிசியுடன் சமைத்து சிறிது உப்பு சேர்த்து உண்டு வர, ரத்த சோகை மறையும். உடலில் இரும்புச்சத்து சேரும்.

தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போக – வெந்தயத்தை பொடித்து, சம அளவு வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை மாத விளக்கு ஏற்படும் முந்தைய நாட்களிலிருந்து சாப்பிட்டு வர வேண்டும்.

(ஆ) வெளிப்பூச்சுக்கு

இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலையில் தடவிக் கொள்ளவும். இதை வாரம் 2 (அ) 3 முறை செய்தால் பொடுகு மறையும்.

உடல் வீக்கம் புண்களுக்கு வெந்தய களிம்பை சிறிது சூடாக்கி தடவினால் குறிப்பு: உதிரப்போக்கு உள்ளவர்கள், அதிக உதிரப்போக்கு நோய்கள் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்.

கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. இது அனைவரும் அறிந்த பழமொழி. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது.

கடுகு சிறு செடி வகை, உயரம் 0.5 மீட்டரிலிருந்து 1.3 மீட்டர் வரை இருக்கும். இலைகள் கோள வடிவில், நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் சிறியதாக, உருண்டையாக, சிவப்பு, பழுப்பு, கருநிறங்களில் இருக்கும். இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் பயிரிடப்படுகிறது. கடுகில் மூன்று வகை உண்டு. அவை சிறிய செங்கடுகு (கருங்கடுகு) பெரிய செங்கடுகு, வெண் கடுகு.

சமையலில் கடுகு தாளிதம் செய்வதற்கு இன்றியமையாதது ஒரு வாசனைப் பொருள் தாளிக்கவில்லையென்றால், நமது சாம்பார், ரசம், களி இவை முழுமையான சுவையை பெறாது. கடுகில்லாமல் நம் நாட்டு சமையலைறகள் இருக்காது. கரண்டியில் சிறிது எண்ணையைக் காய்ச்சி, 1 தேக்கரண்டி கடுகு போட்டால், அது வெடித்து காரசாரமான நெடியை வெளிப்படுத்தும். அப்படியே எண்ணையை கடுகுடன் தாளிதம் செய்ய வேண்டிய சாம்பார், ரசம், கறி இவற்றில் கொட்ட வேண்டியது தான்.

ஊறுகாய் போன்றவற்றுக்கும் கடுகு சேர்க்கப்படுகிறது. கடுகிலிருந்து எடுக்கப்படும் கடுகெண்ணை தான் வட இந்தியாவில் முழுக்க முழுக்க சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணை.

பயன்கள்

வெளிப்பூச்சுக்கு – கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி  பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து பற்றுப் போட வலிகள் குறையும். ஆனால் எரிச்சல் தொடர்ந்தால் பற்றை அகற்றவும். அதிகமான பற்று கொப்புளங்களை உண்டாக்கும்.

கடுகு ஜீரணத்தை மேம்படுத்தும்.

எனவே அஜீரணத்திற்கு, கடுகு நல்ல மருந்து தான்.

ஆனால் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், பேதியை தூண்டிவிடும்.

சரும நோய்களுக்கு கடுகு நல்ல மருந்து. படர் தாமரை (ஸிவீஸீரீ கீஷீக்ஷீனீ) போக, கடுகை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.

ஒரு டீஸ்பூன் கடுகை பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் விக்கல் நீங்கும்.

சித்த வைத்தியத்தில் கடுகு

சித்த வைத்தியம் சொல்லும் கடுகின் குணங்கள்.

வாந்தியுண்டாக்கும்

வெப்பமுண்டாக்கும்

கொப்புள மெழிப்பி

சர்மத்திற்கு வெப்பமூட்டும், அரிப்பை தோற்றிவிட்டு மேலும் தீவிரமான தசை வலிகளை குறைக்கும்.

ஜீரணம் உண்டாக்கும்

சிறுநீர் பெருக்கி

இருமல், மூக்கில் நீர் வடிதல், விக்கல், கோழை, வயிற்றுவலி, கீல்

வாயு, செரியாமை, தலைசுற்றல் இவற்றை போக்கும்.

கடுகின் குறைபாடுகள்

கடுகை பச்சையாக சேர்த்தரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கலாம். இதை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்.

உணவு நலம் நவம்பர் 2011

வைட்டமின் டி
நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா – வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல விஷயங்களை பொருத்தது. நம்முடைய தோல் நிறம், வயது எப்போது வீட்டிலிருந்து வெளியே செல்கின்றோம் முதலியவை அடிப்படை காரணங்கள்.

வெள்ளை தோல் உள்ளவர்கள், தினமும் 1/2 மணி நேரம் நேரடியாக சூரிய ஒளியில் உலாவினால் அவர்களுக்கு தேவையான விட்டமின் ‘டி’ உருவாகி விடுகின்றது. குளிர்காலத்தில் சிறிது அதிக நேரம் பிடிக்கும். கருமை நிறமுடையவர்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் உலாவினால் சர்ம பாதிப்புகள் ஏற்படலாம். கோடையில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி நேரம் வெளியே போவதை தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தால் குடை (அ) தொப்பி, உடல் முழுவதும் மூடும் ஆடைகளுடன் செல்லவும். சன் கிரீம் லோசன்-ஐ தடவிக் கொள்ளலாம்.

பயன்கள்

உணவிலிருந்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களை உடல் கிரகிக்க உதவுகின்றது. இதனால் எலும்புகள், பற்கள் வலிவடைகின்றன.

விட்டமின் டி குறைந்தால் பஞ்சு போல் நெகிழ்ந்து வளையும். எலும்பு நோயான ரிக்கெட்ஸ் குழந்தைகளை தாக்குகின்றது.

விட்டமின் டி குறைபாட்டினால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும்.

கிடைக்கும் பொருட்கள்

சூரிய ஒளி

பால்

வெண்ணெய்

தானியங்கள்

கீரை, காய்கறிகள்

முட்டை

மீன்கள்.

தினசரி தேவை

50 வயதை தாண்டியவர்களுக்கு தாங்கள் வழக்கமாக உட்கொள்வதை விட இரு மடங்கு அதிகம் எடுத்துக் கொள்ளவும். 70 வயதை தாண்டியவர்களுக்கு இன்னும் அதிகம் தேவை.

50 வயதிற்கு குறைந்தவர்கள் – 200 ஐ.யு.

51 லிருந்து 70 வயது வரை – 400 ஐ.யு.

70 வயதை தாண்டியவர்கள் – 600 ஐ.யு.

வைட்டமின் டி குறைந்தால்

முன்பு சொன்னபடி குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் ஏற்படும். ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படலாம்.

காது கேளாமை, வாய் தொண்டை எரிச்சல்.

எலும்பு, தசை பலவீனமடையும்.

அதிகமானால்

பசியின்மை, தலை வலி, பேதி ஏற்படலாம். உடல் சோர்வடையும். கால்சியம் தேங்கி அதிக அளவு நாளங்களில், சிறுநீரகத்தில், இதயத்தில் படிந்து பல நோய்களை உண்டாக்கும்.

உணவு நலம் நவம்பர் 2011

எவ்வகை சுவை
இதமான உணவு புருஷ வளர்ச்சிக்கு காரணம். இதமற்ற உணவு நோய்க்கு காரணம் – ஆத்ரேயர்.

நம்மில் பலர் வாழ்வதற்காக உண்கிறோம். சிலர் உண்பதற்காக வாழ்கின்றனர். எப்படியிருந்தாலும் வயிற்றை நிரப்பவும், பசியை போக்கவும் உணவை உண்டே ஆக வேண்டும். அந்த உணவு சுவையாக இருந்தால் நல்லது.

சுவைகளை ஆயுர்வேதம் ரசம் என்கிறது. ஆறு சுவைகளை விவரிக்கிறது. இந்த ரசங்கள் நீரில் அடிப்படையில் அமைந்தவை என்றும், உலகில் உணவுப் பதார்த்தங்கள் தோன்றிய போதே இச்சுவைகளுடன் தோன்றின என்கிறது ஆயுர்வேதம். இந்த சுவைகளை உணர்வது நாக்கு. இந்த ஆறு சுவைகள்.

இனிப்பு (மதுரம்)

புளிப்பு (அம்லா)

உப்பு (லவணா)

உரைப்பு (காட்டு)

கசப்பு (திக்தா)

துவர்ப்பு (கஷாயா)

இனிப்பு- பூமி, நீர் – இந்த இரண்டு மகா பூதங்களடங்கியது இனிப்புச் சுவை. இனிப்புச் சுவை உள்ளவை – அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, பால், தேன், கிழங்குகள், முட்டைகள், மாம்பழம், வாழைப்பழம், நெய் போன்றவை. கபதோஷ கோளாறுகளில் இனிப்பை தவிர்க்க வேண்டும். இனிப்பு வாயுவை தணிக்கும். கபத்தை வளர்க்கும்.

புளிப்பு- இந்த சுவை பூமி, நெருப்பு பூதங்களால் ஆனது. வாதத்தை சாந்தப்படுத்தி, கபத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கும். எலுமிச்சை, தக்காளி, புளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்ச் பழ வகைககள், தயிர், மாங்காய் இவை புளிப்பு சுவைக்கு உதாரணங்கள்.

உப்பு- இந்த சுவை பித்தத்தையும், கபத்தையும் வளர்க்கும். நெருப்பு, நீர் பூதங்களால் ஆனது. உதாரணங்கள் – அப்பளம், ஊறுகாய்.

உரைப்பு- இந்த காரச்சுவை வாயுவும் நெருப்பும் சேர்ந்த கலவை. வாதத்தையும் பித்தத்தையும் அதிகரித்து, கபத்தை கட்டும். மிளகாய், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை இந்தச் சுவைக்கு உதாரணங்கள்.

கசப்பு- ஆகாயமும், வாயுவும் கலந்த சுவை. வாயுவை தூண்டி, கப பித்தத்தை குறைக்கும். பாகற்காய், வெந்தயம், மஞ்சள், மசாலாக்கள், பசலைக்கீரை – இவை இந்த சுவைக்கு உதாரணங்கள்.

துவர்ப்பு- பூமியும் வாயுவும் இணைந்த சுவை. பித்தத்தையும், கபத்தையும் குறைக்கும். இந்த சுவையுள்ள உணவுகள் – பருப்புகள், தேயிலை, முட்டைகோஸ், காலிப்ளவர் போன்றவை.

உணவு நலம் நவம்பர் 2011

வருமுன் காத்திடலாம்
வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு.

ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது – இந்த தடுப்பு முயற்சி ஸ்வஸ்த சம்ரக்சணம் எனப்படும். இரண்டாவது நோக்கம் நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவது. இது ரோக நிவாரணம் எனப்படுகிறது.

மனிதன் எப்போது ஆரோக்கியமுள்ளவனாக இருக்கிறான் சகிப்புத்தன்மை, வலுவான உடல், திடமான மனது, இவை கூடி இருக்கும் போது.

ஆரோக்கிய மனிதனின் அறிகுறிகள்

நல்ல பசி எடுக்கும். ஜீரண சக்தி நிறைந்திருக்கும்.

மலம், சிறுநீர் கழிதல் நார்மலாக இருக்கும்.

நல்ல தூக்கமிருக்கும். உற்சாகம் ததும்பும்.

நல்ல நிறமும், நல்ல பளிப்பான சர்மமும், போஷாக்கான உடலும் அமைந்திருக்கும்.

வருமுன் காத்தல்

வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது மேல். இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள்.

தினசரி சூர்யன் உதயமாகுமின் எழுந்திருக்கவும்.

காலைக் கடன்களை செவ்வனே கழிக்கவும்.

தினமும் இரு தடவை புங்கமர குச்சியால் பல் துலக்க வேண்டும் என்கிறார் சரகர். ஈறுகளை காயப்படுத்தாமல் பல் துலக்க வேண்டும். நாக்கை வழிக்க வேண்டும். இதற்கு தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் இவற்றினால் ஆன நாக்கு வழிப்பானை பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் நாம் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பல் துலக்குவது வழக்கம். இந்த வழக்கத்தையே தொடரலாம். ஆனால் பல் துலக்காமல் காபியோ, டீயோ குடிக்க வேண்டாம்.

ஒரு நாளைக்கு இரு தடவை குளிக்கவும். ஆடையின்றி குளிக்க வேண்டாம்.

குளித்த பின் அழுக்கான, கிழிந்த உடைகளை அணிய வேண்டாம். சுத்தமான சௌகரியமான ஆடைகளை அணிய வேண்டும்.

ஆபரணங்கள் அணிந்து கொள்வது, வைரம், முத்துக்கள் இவற்றை அணிவது மங்களகரமானது.

வாசனை திரவியங்கள் மலர்கள் இவற்றை பயன்படுத்துவது நல்லது. இவைகள் சோகத்தை நீக்கி மனபலத்தையும், உடல்பலத்தையும், ஆயுளையும் அதிகரிக்கும் என்கிறார் சரகர்.

இரு வாரங்களில் ஒரு தடவை கை கால் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.

கால், பாதங்கள், மல ஜல அவயங்கள் இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும்.

எண்ணெயும் நன்மையும்

ஆயுர்வேதத்தின் படி தலையில் தினசரி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். எண்ணெய் தலைமுடி நரைக்காமல், தலைவலி வராமல் பாதுகாக்கும். மண்டையை பலப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

நல்லெண்ணையால் வாய்கொப்பளித்தல் பற்களை பாதுகாக்கும். பசி உண்டாகும். உணவு சுவை நன்கு தெரியும்.

எண்ணெய்ப் பசை உள்ள வண்டி நன்கு நகரும். அதே போல உடலின் அவயங்களில் எண்ணெய்ப் பசை நிறைந்தால் அவை நன்கு செயல்படும். எண்ணெய்ப் பசை தோலுக்கும் நல்லது. வாத நோய்களிலிருந்து பாதுகாக்கும். முதுமையின் பாதிப்பு தடுக்கப்படும்.

எண்ணெய் மசாஜ் உடலின் துர்நாற்றம், அரிப்பு, வியர்வை, அழுக்கு இவற்றை போக்கும்.

ஆயுர்வேதம் பெண்கள் தினசரி கண்களில் மை இட்டுக் கொள்ள வேண்டும்.

உணவு

ஆயுர்வேதம் சொல்வது- குளிக்காமல், கைகளில் ஆபரணங்கள் அணியாமல், மந்திரங்கள் சொல்லாமல், கடவுள், முன்னோர்களை வணங்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.

தவிர கை, முகம், கால் கழுவாமல், வாய் கொப்பளிக்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.

சுத்தமில்லாதவர்கள் பரிமாறும் உணவை உட்கொள்ளக் கூடாது.

ஓர் இரவு பழமையான உணவு பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இதற்கு விதிவிலக்கு பழங்கள், சமைக்காத காய்கறிகள், பாதுகாக்கப்பட்ட மாமிசம் போன்றவை.

ஒருவருக்கு எவ்வளவு உணவு தேவை என்பது அவருடைய ஜீரண சக்தியை பொறுத்தது.

அரிசி, பருப்பு, இளம் யானையின் மாமிசம் இவை இலகுவான உணவு என்கிறது ஆயுர்வேதம். கடலைமாவு, நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், உளுந்து, இவை பளுவான உணவு என்கிறது ஆயுர்வேதம்.

மூலிகை தூபம்

குளித்த பின் உணவு, உணவுக்குப் பின், வாந்தி, தும்மல், பல் துலக்கிய பின் மூலிகை தூபம் இடுவது நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

இதற்கான நாதஸ்வரம் போன்ற ஒரு உபகரணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலிகைகளால் ஆன களிம்பு இந்த உபகரணத்தின் முன்னிலையில் வைக்கப்படுகிறது. இது காய்ந்த பின் நெருப்பு மூட்டப்படுகிறது இதன் புகை குழாயின் வழியாக மூக்கினாலோ அல்லது வாயினாலோ நுகரப்படுகிறது. சரகர் கிட்டத்தட்ட 32 மூலிகைகளை இதற்காக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆயுர்வேதத்திற்கு உகந்தவை

சரகர் சில ஆலோசனைகளை உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லியிருக்கிறார்.

உடல் உழைப்பு தேவை, ஆனால் அளவுக்கு மீறி இருக்கக் கூடாது.

பாதுகாப்பில்லாத வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். உயரமான மலைகளில் ஏற வேண்டாம். பரிச்சயம் இல்லாத மலைகளில் ஏற வேண்டாம். வேகமாக பாயும் நதிகளில் நீந்த வேண்டாம்.

வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிய வேண்டும். ஒரு தடியையும், குடையையும் எடுத்துச் செல்ல வேண்டும். காலணி அணிய வேண்டும்.

பொது இடங்களில் அல்லது சபைகளில் உரக்க சிரிக்க வேண்டாம். கொட்டாவி விடுவது, தும்புவது இவற்றை தவிர்க்க வேண்டும்.

சாலையில் எச்சில் துப்ப வேண்டாம். சிறுநீர் கழிக்க வேண்டாம்.

பிறர் மனைவியையோ, பொருளையோ நாட வேண்டாம். பொய்கள் சொல்ல வேண்டாம்.

குடிப்பது, சூதாடுவது, ஒழுக்கமில்லாதவர்களுடன் நட்பு கொள்வது இவற்றை தவிர்க்கவும்.

வாழ்க்கையில் சுக துக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றால் மனம் தளர வேண்டாம்.

உடலின் நோய் தடுப்பு சக்தியை ஊக்குவிப்பது

ஆயுர்வேதத்தின் படி போஷாக்கான உணவு, ஜீரண அக்னி, திசுக்களின் உற்பத்தி இவைகள் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆயுர்வேத சிகிச்சை முறையான ரசாயனம் உடலின் எதிர்ப்பு சக்தியை நன்றாக அதிகப்படுத்தும்.

சக்தி வாய்ந்த மூலிகைகள் உபயோகிக்கப்படும். இவற்றால் பக்க விளைவு ஏற்படாது.

அற்புதமான பஞ்சகர்மா சிகிச்சையும் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும்.

தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், உடல் வலுவையும் மேம்படுத்தும்.

உங்களின் உடலுக்கேற்ற உணவுகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

யோகாவும், தியானமும் அவசியத் தேவை.

முடிவுரை

சரகர் சொல்கிறார் – ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மனிதன், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால் 36,000 இரவுகள் அதாவது 100 வருடங்கள் நோய் நொடியின்றி வாழ முடியும். நல்ல நடத்தையும், நற்குணங்களையும், மனோ ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் ஒருவனுக்கு ஐம்புலன்களின் கட்டுப்பாடும் வந்து சேரும். அத்தகைய மனிதன் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைகிறான்.

உணவு நலம் நவம்பர் 2011