உணவு நலம் - இயற்கை உணவு - Unavu Nalam - Healthy Foods - Natural Foods

இனிய குரல் வளம் பெற
கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் - Adhatoda Vasica

இதர மொழிகளில் – சமஸ்கிருதம் – வசாகா, வசிகா சிம்ஹாசயா, ஹிந்தி – அருஸா, ஆங்கிலம் – Malabar Nut.

தாவர விவரங்கள்

நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் “ஆடாதொடை” என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி. கோள வடிவமுள்ள இலைகள் 10 – 16 செ.மீ. நீளமுடையவை. இலைகளில் மெல்லிய நூல் போன்ற முடிகள் இலை அமைப்பு சூலம் போல் அகன்று, நுனியில் குறுகி இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறங்களில் இருக்கும். உலர்ந்த இலைகள் பழுப்பு நிறமாகும். உலர்ந்த இலைகள் தேநீர் போல் மணமிருந்தாலும், கசப்பு சுவை உடையவை.

பூக்கள் அடர்த்தியாக ஒரே தண்டில் கொத்து, கொத்தாக இருக்கும். மஞ்சரி தண்டு (Peduncle) 3 – 9 செ.மீ. நீட்டமிருக்கும். இதழ்கள் பெரியதாக, வெண்மையாக, நுனியில் ஊதா வண்ணமாக இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் பூக்கள் சிங்கத்தின் திறந்த வாய் போல் தோன்றும். எனவே ‘சிம்ஹாசயா’ என்ற சமஸ்கிருத பெயரும் இந்த மூலிகைக்கு உண்டு. தண்டு உருண்டு இருக்கும். முடிச்சுகள் (கணுக்கள்) உண்டு.

ஆடாதொடையில் “வாசிசைன்” (Vasicine) என்ற கசப்பான படிக “ஆல்கலாய்ட்” (Alkaloid) – காரத்தன்மை) உள்ளது. மற்றும் வாசமற்ற, எளிதில் ஆவியாகும், எண்ணையும் உள்ளது. வாசிசைனில், பெகானைன் (Peganine) உள்ளது. வேர்களில் வாசிசினோலின் (Vasicicinolene) வாசிகோல் (Vasicol) மற்றும் பெசானின் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஆடாதொடையில், வாசமுள்ள எண்ணை, பிசின்கள், கொழுப்புகள், கசப்பு வாசிசைன், சர்க்கரை, உப்பு இவைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். அமுகக் செய்யும் கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி.

கோனேரியா போன்ற பாலியல் நோய்களுக்கு ஆடாதொடை வேர்கள் மருந்தாக பயன்படுகின்றன. பூக்கள் மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தொண்டை கரகரப்பு, தொண்டை கமரல் போன்றவற்றிற்கும் தொடர் இருமலுக்கும் ஆடாதொடை உகந்தது. ஆடாதொடையை தொடர்ந்து உபயோகித்து வர குரல் இனிமையைப் பெறலாம்.

சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடை யிலிருந்து கிடைக்கும் ‘வாசிசைன்’ பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால் பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களால், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தன. மெதர்ஜின் (Methergin) போன்ற மருந்துகளுக்கு இணையானது. மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் பிடிப்பதையும் கைவிடலாம்!

ஆடாதொடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் சுவாச மண்டல அவயங்கள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.

இந்திய மருத்துவ பெயர்களும் செய்யும் விதமும் அடங்கிய பட்டியலில் ஆடாதொடையின் பச்சை மற்றும் காய்ந்த இலைகள் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் ‘ரக்த பித்தம்’ எனப்படும் உதிரப்போக்கு கோளாறுகளுக்கு ஆடாதொடை தனியாகவும், பிற மருந்துகளுடன் சேர்ந்தும், பயன்தருகிறது. இதன் பச்சிலை சாறு, தேனுடன் சேர்த்து கொடுக்க உதிரப்போக்கு தடைபடும். சரகசம்ஹிதை ரத்தப்போக்குக்கு ஆடாதொடையை சிபாரிசு செய்கிறது.

உலர்ந்த இலைகளிலிருந்து கிடைக்கும் சாறு, வலியை குறைக்கும் மருந்தாக பயன்படு கிறது.பைலோகார்பின் என்ற கண்களுக்கு ஏற்ற சொட்டு மருந்தின் பக்க விளைவுகளில் ஒன்று அதிக உமிழ் நீர் சுரப்பது மற்றும் ஜீரணகோளாறுகள் ஆகியவற்றை குறைக்கிறது.

வீக்கங்களுக்காக ஆடாதொடை இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட கலவை சீக்கிரமாக காயங்களை ஆற்றும். ருமாடிஸம் உண்டாக்கும் வலிகளை குறைக்கும்.

கல்லீரல் பாதிப்புகளை ஆடாதொடை தடுக்கிறது.

“பயோரியா” விற்கு ஆடாதொடை மருந்தாகும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை ஆடாதொடை கட்டுப்படுத்தும்.

ஷயரோகத்திற்கும் ஆடாதொடை மருந்தாக உதவும். ஆனால் அதன் ஆற்றல் “ஸ்டெப்டோமைசின்” (Streptomycin) மருந்தை விட பாதியளவு குறைவு.

பல ஆயுர்வேத மருந்துகளில் ஆடாதொடை சேர்க்கப்படுகிறது. ஆடாதொடை இலைசாறு மூக்கிலிருந்து வரும் ரத்த போக்கை நிறுத்தும். 5 மி.லி. அளவில் சாறு ஒரு நாளில் 2 வேளை குடிக்க வேண்டும்.

எச்சரிக்கை

கர்ப்பஸ்தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.

ஜனவரி 2012

100 வயது வாழலாம்
வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு.

ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது – இந்த தடுப்பு முயற்சி “ஸ்வஸ்த சம்ரக்சணம்” எனப்படும். இரண்டாவது நோக்கம் நோய்வாய்பட்டவர்களை குணப்படுத்துவது. இது “ரோக நிவாரணம்” எனப்படுகிறது.

மனிதன் எப்போது ஆரோக்கியமுள்ளவனாக இருக்கிறான்? சகிப்புத்தன்மை, வலுவான உடல், திடமான மனது, இவை கூடி இருக்கும் போது.

ஆரோக்கிய மனிதனின் அறிகுறிகள்

நல்ல பசி எடுக்கும். ஜீரண சக்தி நிறைந்திருக்கும்.

மலம், சிறுநீர் கழிதல் ‘நார்மலாக’ இருக்கும்.

நல்ல தூக்கமிருக்கும். உற்சாகம் ததும்பும்

நல்ல நிறமும், நல்ல பளபளப்பான சர்மமும், போஷாக்கான உடலும் அமைந்திருக்கும்.

வருமுன் காத்தல்

வந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பது மேல். இதற்கான ஆயுர்வேத பரிந்துரைகள்.

தினசரி சூரியன் உதயமாகுமுன் எழுந்திருக்கவும்.

காலைக் கடன்களை செவ்வனே கழிக்கவும்.

தினமும் இரு தடவை புங்கமர குச்சியால் பல் துலக்க வேண்டும் என்கிறார் சரகர். ஈறுகளை காயப்படுத்தாமல் பல் துலக்க வேண்டும். நாக்கை வழிக்க வேண்டும். இதற்கு தங்கம், வெள்ளி, செம்பு, தகரம் இவற்றினால் ஆன நாக்கு வழிப்பானை பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் நாம் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பல் துலக்குவது வழக்கம். இந்த வழக்கத்தையே தொடரலாம். ஆனால் பல் துலக்காமல் காபியோ, டீயோ குடிக்க வேண்டாம்.

ஒரு நாளைக்கு இரு தடவை குளிக்கவும். ஆடையின்றி குளிக்க வேண்டாம். குளித்த பின் அழுக்கான, கிழிந்த உடைகளை அணிய வேண்டாம். சுத்தமான சௌகரியமான ஆடைகளை அணிய வேண்டும்.

ஆபரணங்கள் அணிந்து கொள்வது, வைரம், முத்துக்கள் இவற்றை அணிவது மங்களகரமானது.

வாசனை திரவியங்கள் மலர்கள் இவற்றை பயன்படுத்துவது நல்லது. இவைகள் சோகத்தை நீக்கி மனபலத்தையும், உடல்பலத்தையும், ஆயுளையும் அதிகரிக்கும் என்கிறார் சரகர்.

இரு வாரங்களில் ஒரு தடவை கை கால் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.

கால், பாதங்கள், மல ஜல அவயங்கள் இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும்.

எண்ணெயும் நன்மையும்

1. ஆயுர்வேதத்தின் படி தலையில் தினசரி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். எண்ணெய் தலைமுடி நரைக்காமல், தலைவலி வராமல் பாதுகாக்கும். மண்டையை பலப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

2. நல்லெண்ணையால் வாய்கொப்பளித்தல் பற்களை பாதுகாக்கும். பசி உண்டாகும். உணவு சுவை நன்கு தெரியும்.

3. எண்ணெய்ப் பசை உள்ள வண்டி நன்கு நகரும். அதே போல உடலின் அவயங்களில் எண்ணெய்ப் பசை நிறைந்தால் அவை நன்கு செயல்படும். எண்ணெய்ப் பசை தோலுக்கும் நல்லது. வாத நோய்களிலிருந்து பாதுகாக்கும். முதுமையின் பாதிப்பு தடுக்கப்படும்.

4. எண்ணெய் மசாஜ் உடலின் துர்நாற்றம், அரிப்பு, வியர்வை, அழுக்கு இவற்றை போக்கும்.

5. பெண்கள் தினசரி கண்களில் மை இட்டுக் கொள்ள வேண்டும்.

உணவு

1. ஆயுர்வேதம் சொல்வது குளிக்காமல், கைகளில் ஆபரணங்கள் அணியாமல், மந்திரங்கள் சொல்லாமல், கடவுள், முன்னோர்களை வணங்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.

2. தவிர கை, முகம், கால் கழுவாமல், வாய் கொப்பளிக்காமல் உணவு உட்கொள்ளக் கூடாது.

3. சுத்தமில்லாதவர்கள் பரிமாறும் உணவை உட்கொள்ளக் கூடாது.

4. ஓர் இரவு பழமையான உணவு பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இதற்கு விதிவிலக்கு பழங்கள், சமைக்காத காய்கறிகள், பாதுகாக்கப்பட்ட மாமிசம் போன்றவை.

5. ஒருவருக்கு எவ்வளவு உணவு தேவை என்பது அவருடைய ஜீரண சக்தியை பொறுத்தது.

6. அரிசி, பருப்பு, இலகுவான உணவு என்கிறது ஆயுர்வேதம். கடலைமாவு, நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், உளுந்து, பளுவான உணவு என்கிறது ஆயுர்வேதம்.

ஆயுர்வேதத்திற்கு உகந்தவை

சரகர் சில ஆலோசனைகளை உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லியிருக்கிறார்.

1. உடல் உழைப்பு தேவை, ஆனால் அளவுக்கு மீறி இருக்கக் கூடாது.

2. பாதுகாப்பில்லாத வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். உயரமான மலைகளில் ஏற வேண்டாம். பரிச்சயம் இல்லாத மலைகளில் ஏற வேண்டாம். வேகமாக பாயும் நதிகளில் நீந்த வேண்டாம்.

3. வெளியில் செல்லும் போது தலையில் தொப்பி அணிய வேண்டும். ஒரு தடியையும், குடையையும் எடுத்துச் செல்ல வேண்டும். காலணி அணிய வேண்டும்.

4. பொது இடங்களில் அல்லது சபைகளில் உரக்க சிரிக்க வேண்டாம். கொட்டாவி விடுவது, தும்முவது இவற்றை தவிர்க்க வேண்டும்.

5. சாலையில் எச்சில் துப்ப வேண்டாம். சிறுநீர் கழிக்க வேண்டாம்.

6. பிறர் மனைவியையோ, பொருளையோ நாட வேண்டாம். பொய்கள் சொல்ல வேண்டாம்.

7. குடிப்பது, சூதாடுவது, ஒழுக்கமில்லாதவர்களுடன் நட்பு கொள்வது இவற்றை தவிர்க்கவும்.

8. வாழ்க்கையில் சுக துக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றால் மனம் தளர வேண்டாம்.

உடலின் நோய் தடுப்பு சக்தியை ஊக்குவிப்பது

1. ஆயுர்வேதத்தின் படி போஷாக்கான உணவு, ஜீரண ‘அக்னி’, திசுக்களின் உற்பத்தி இவைகள் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.

2. ஆயுர்வேத சிகிச்சை முறையான ‘ரசாயனம்’ உடலின் எதிர்ப்பு சக்தியை நன்றாக அதிகப்படுத்தும்.

3. சக்தி வாய்ந்த மூலிகைகள் உபயோகிக்கப்படும். இவற்றால் பக்க விளைவு ஏற்படாது.

4. அற்புதமான பஞ்சகர்மா சிகிச்சையும் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும்.

5. தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்தையும், உடல் வலுவையும் மேம்படுத்தும்.

6. உங்களின் உடலுக்கேற்ற உணவுகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

7. யோகாவும், தியானமும் அவசியத் தேவை.

சரகர் சொல்கிறார் – ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மனிதன், நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு வந்தால் 36,000 இரவுகள் அதாவது 100 வருடங்கள் நோய் நொடியின்றி வாழ முடியும். நல்ல நடத்தையும், நற்குணங்களும், மனோ ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் ஒருவனுக்கு ஐம்புலன்களின் கட்டுப்பாடும் வந்து சேரும். அத்தகைய மனிதன் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைகிறான்.

ஜனவரி 2012

பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணி சூப்

தேவை

பச்சைப் பட்டாணி - 250 கிராம்
கார்ன் ப்ளார்      - 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்      - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி     - சிறிது
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். வேக வைத்த பச்சைப் பட்டாணியை சிறிது தனியே எடுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதனை கார்ன் ப்ளாருடன் நன்றாக கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். இறக்கும் போது தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் சிறு துண்டுகளாக்கி மேலே தூவி வெண்ணெய் சேர்த்து பரிமாறவும். பரிமாறும் போது சூப்பின் மேல் மிளகுத்தூள் தூவவும்.

பச்சைப் பட்டாணி சாலட்

தேவை

பச்சைபட்டாணி – 1/4 கிலோ

தக்காளி – 2

துளசி இலைகள் – 3 டீஸ்பூன்

சீஸ் – 50 கிராம்

ட்ரஸ்ஸிங்

வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 1 பல்

ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியின் தோலை உரித்து விதைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து பட்டாணி சூடாக இருக்கும் பொழுதே அதனுடன் சேர்த்துக் கலக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பேசில் இலைகளை சாலடுடன் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சீஸை துருவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

பச்சைப் பட்டாணி ரைஸ்

தேவை

பொன்னி பச்சரிசி – 1 ஆழாக்கு

பச்சை பட்டாணி – 250 கிராம்

பச்சை மிளகாய் – 5

கொத்தமல்லி – 1/2 கட்டு

சோம்பு – 1 டீஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – சிறிது

பூண்டு – 5 பல்

வெங்காயம் – 1

தக்காளி – 1

முந்திரி – 10

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 1

பிரிஞ்சி இலை – 1

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 21/4 டம்ளர்

செய்முறை

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றிக் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கி கடைசியாக தக்காளி, அரிசி போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, பட்டாணி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறி, முந்திரியை நெய்யில் வறுத்து சாதத்தின் மீது தூவி அலங்கரித்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

பச்சைப் பட்டாணி குருமா

தேவை

பச்சைப் பட்டாணி – 1/2 கப்

எலுமிச்சம் பழச்சாறு – 3 டீஸ்பூன்

தேங்காய் துருவியது – 1/2 கப்

முந்திரிப் பருப்பு – 20

பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப்

முந்திரி, கிஸ்மிஸ் சேர்ந்து- 2 டே. ஸ்பூன்

எண்ணெய், உப்பு, நெய் – தேவையானது

கொத்தமல்லி – சிறிது

அரைக்க

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 6 (தலா 2)

பச்சை மிளகாய் – 6

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கசகசா – 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்

மல்லி – 2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீஸ்பூன்

செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவாக நறுக்கவும். தேங்காயையும் 20 முந்திரியையும் அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களையும் அரைக்கவும். சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பையும், கிஸ்மிஸ்ஸையும் வறுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சூடாக்கி அதில் பெரிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின்னர் காய்கள் வேகும் அளவுக்கு நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும். எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ஜனவரி 2012

வேர்க்கடலை
வலிமை தரும் வேர்க்கடலை

உஷ்ணப்பிரதேசங்களில் விளையும் பயிர்களில் முக்கியமான "பணம் தரும்" பயிர்களில் ஒன்று வேர்க்கடலை. மக்களால் வெகுவும் விரும்பப்படும் எளிமை யான உணவுப்பொருள். இந்தியாவின் முக்கியமான வியாபார ஆகாரப் பொருள். வேர்க்கடலையின் தாதாவரவியல்  பெயர் Arachis Hypogaea.
இதர மொழிப் பெயர்கள் - சமஸ்கிருதம் - புசானக்கா, இந்தி - முங்ஃபன்னி, ஆங்கிலம் - Earth nut, Ground Nut, Pea - nut.

சரித்திரம்

வேர்க்கடலை தென் அமெரிக்காவில் தோன்றியிருக்கலாம். இதை "வீட்டுச் செடியாக" கற்காலத்திலிருந்தே, அதாவது 7600 ஆண்டுகளுக்கு முன்பே, பெருவில் பயிரிடப் பட்டிருக்கலாம். ஐரோப்பிய வியாபாரிகள் இதை உலகெங்கும் பரப்பினார்கள். "காலணிகளை" (Cononies) தேடி அடைந்த போர்ச்சுக்கீயர்கள், இந்தப் பயிரை ஆப்ரிக்காவில் அறிமுகப்படுத்தினர்.
சீனாவில், 1600 ல் வேர்க்கடலையை அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீயர்களே. இப்போது உலகிலேயே அதிக அளவு வேர்க்கடலையை உற்பத்தி செய்வது சீனா. அடுத்தபடி வருகிறது இந்தியா. ஆனால் இந்த இரண்டு தேசங்களும், உலக வியாபாரத்தில் வேர்க்கடலையை 4% தான் ஏற்றுமதி செய்கின்றனர். ஏனென்றால் இங்கு விளையும் கடலை உள்நாட்டு உபயோகத்திற்காக சரியாகி விடுகின்றது. அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சூடான், செனகல், இந்த தேசங்கள் அதிகமாக வேர்க்கடலையை ஏற்றுமதி செய்கின்றனர். இவைகளின் ஏற்றுமதி, உலகின் மொத்த ஏற்றுமதியில் 70% ஆகும். ஏழை தேசமான செனகலின் பொருளாதாரம் வேர்க்கடலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நம்பியே இருக்கிறது. அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகள் ஐரோப்பிய தேசங்கள், கனடா மற்றும் ஜப்பான்.

தாவர விவரங்கள்

வேர்க்கடலை, அதன் பெயருக்கேற்ப பூமிக்கு அடியில் விளையும். வேர்களில், கடலையை தாங்கிய விதைப் பைகள் முளைக்கும். செடி நிமிர்ந்து, பூமிக்கு மேல் 50 - 90 செ.மீ. உயரம் வளரும். சில ரகங்கள் தரையில் படர்ந்து தண்டுகளின் முடிச்சு, பூமியில் இறங்கும். இலைகள் ஜோடியாக நீண்ட இலைக் காம்புகளில் (Petiole) அமைந்திருக்கும். பூக்கள் மஞ்சள் வண்ணமுடையவை. சுய மகரந்த சேர்க்கை செய்து கொள்பவை. மகரந்த சேர்க்கைக்குப் பின் பூக்களை தாங்கும் காம்பு நீண்டு, விதைப்பையை (Pod) பூமிக்குள் அழுத்தும். விதைகளால் பயிரிடப்படும் வேர்க்கடலையை 4-5 மாதங்களில் அறுவடை செய்யலாம். நிலக்கடலை பயிருக்கு, சூடான, லகுவான மண், மற்றும் ஈரப்பசை உள்ள காற்று வெளி நல்லது. உஷ்ணம் குறைந்த பகுதிகளிலும் வேர்க்கடலை வளருகிறது. லகுவான (Light) மண், அறுவடையை சுலபமாக்கும். நிலக்கடலை பயிருக்கு 4-5 மாதம் நல்ல சூர்ய ஒளியும், 500-1000 மி.மீ. மழையும் (வருடத்தில்) தேவைஅறுவடை தகுந்த சமயத்தில் செய்ய வேண்டும். சிறிது முன்பு செய்தால் விதைகள் முதிர்ச்சி அடைந்திருக்காது. தாமதமாக செய்தால் விதைப்பைகள் செடியிலிருந்து கழன்று பூமியில் தங்கி விடும்! சுருங்கிய முகம் போன்ற தோலுடைய விதைப்பையில் 2 லிருநது 4 விதைகள் (கொட்டைகள்) இருக்கும். அறுவடை செய்த விதைப் பைகளை பத்திரமாக சேமித்து வைப்பது அவசியம். இல்லாவிடில் ஃபங்கஸ் (Fungus) தாக்கி விடும்.

பயன்கள்

1. வேர்க்கடலை புரதமும், எண்ணெய்யும் செறிந்து இருப்பதால் ஓர் சத்து நிறைந்த உணவு. இதில் விட்டமின்களும் உள்ளன.
2. சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலையை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கனவே சமைத்த உணவுகளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும்.
3. வேர்க்கடலையில் லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.
4. வேர்க்கடலையில் விட்டமின் பி3 (நியாசின்) அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது.

5. சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம், வேர்க்கடலையில் ரெஸ்வேராட்ரால் (ஸிமீsஸ்மீ(Resveratrol) என்ற பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பொருள் புற்றுநோய்க்கு எதிரி. தவிர இதயத்திற்கு நல்லது. இந்தப் பொருள் சிகப்பு திராட்சையில் அதிகம் உள்ளது. இந்த திராட்சையை ஒயினாக அதிகம் உட்கொள்ளும் பிரான்ஸ் தேசத்து மக்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவது குறைவு. இந்த சிகப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வேராட்ரால் அளவு வேர்க்கடலையிலும் உள்ளது.
6. அதே போல சமீபத்திய ஆராய்ச்சிகள் வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் (கிஸீtAnti - Oxidant) நிறைந்திருப்பதை தெரிவிக்கின்றன. இதன் தரம் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்க்கு சமமானது.
7. வேர்க்கடலை சிற்றுண்டிகள், வெல்லத்தோடு சேர்த்து செய்யப்படும் இனிப்புகள் எல்லோராலும் விரும்பப்படுகிறது. இவை ஆண்மையை பெருக்கும்.
8. கடலை எண்ணெய் - வேர்க்கடலையின் அடுத்த முக்கியமான பயன் அதிலிருந்து கிடைக்கும் சமையல் எண்ணெய் தான். இந்த கடலை எண்ணெய் இந்தியாவில் சமையலில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இதை ரீபைன்ட் ஆயில்

(Refined Oil) என்று குறிப்பிடுகின்றோம். இந்த எண்ணெய்யை எடுத்த பின் கிடைக்கும் புண்ணாக்கு மாடுகளுக்கு தீவனமாக பயன்படு கிறது. மற்றும் பெயிண்ட், சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
9. தோலூரித்து, வறுக்கப்பட்ட வேர்க்கடலை யிலிருந்து வேர்க்கடலை வெண்ணெய் தயாரிக்கப் படுகிறது. இதை நம்நாட்டை விட மேல் நாட்டவர்கள் அதிகம் உபயோகிக்கிறார்கள்.
10. விதைப்பைகளின் தோல் பிளாஸ்டிக், செல்லூலோஸ் மற்றும் ஒட்டும் பிசின்கள் தயாரிப்பில் உபயோகிக்கப்படுகிறது.

எச்சரிக்கை

1. அதிகமாக வேர்க்கடலை உண்பது பித்தத்தை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம். வேர்க்கடலை வாதத்ததையும் அதிகரிக்கும்.
2. அதே போல கடலை எண்ணெயை அதிகமாக உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
ஜனவரி 2012

நீரிழிவு சைட் டிஷ்
சர்க்கரைக் கேற்ற சைட் டிஷ்

திருமதி. அன்னம் செந்தில் குமார்

தால் ஃப்ரை

தேவை

பாசிப்பருப்பு – 1 கப்

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 1

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சீரகம் – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி -2டே ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

பட்டை – சிறிது

செய்முறை

பாசிப்பருப்புடன் தண்ணீர் கலந்து, மஞ்சள் தூள் தூவவும். இதனைக் குக்கரில் போட்டு, வெயிட் போட்டு, இரண்டு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம். பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் தக்காளியைக் கலந்து வதக்கவும். பின்னர் இந்தக் கலவையில் வெந்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு உப்பும் இப்போதே சேர்த்துவிடவும். தால் ஃப்ரை சிலருக்குக் கெட்டியாகப் பிடிக்கும், சிலர் அது நீர்த்து இருப்பதை விரும்புவார்கள். இந்த விருப்பத்தின் அடிப்படையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவை

பீன்ஸ் – 200 கிராம்

துவரம் பருப்பு – 1/2 கப்

கடலைப் பருப்பு – 1/2 கப்

மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – தேவைக்கு

கொத்தமல்லி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கு

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அந்த நேரத்தில் பீன்ஸைக் கழுவி, பொடிப்பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீரில் வேக விடவும். அதிகத் தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். பின்னர் அதை வடிகட்டும் நிலை ஏற்பட்டால் சத்துகள் வீணாகிவிடும். வேகும் பீன்ஸை அடிக்கடி எடுத்து நசுக்கிப் பார்க்கவும், குழையாமல், அதே சமயம் வெந்து இருக்கும் நிலையில் எடுத்து விடவும். ஊறிய பருப்புகளை வடிகட்டி, அத்துடன் கறிவேப்பிலை, சிறிது பெருங்காயம், காய்ந்த மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போடவும். இந்தக் கலவையைத் தண்ணீர் சேர்க்காமல், கெட்டியாக, கொரகொர என்கிற அளவுக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, சிறு உருண்டைகளாகச் செய்து இட்லித் தட்டில் போடவும். இதனைக் குக்கர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் வைத்துப் பத்து நிமிடம் வேக விடவும் (வெயிட் போடாமல்). வெந்த உருண்டைகளைத் திறந்து நன்கு ஆற விடவும். பின்னர் அவற்றைக் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு ‘விப்பர்’ முறையில் இரண்டு சுற்றுகள் அரைக்கவும். பூப்பூவாகப் பருப்பு உசிலி தயாராகிவிடும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்புப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கவும். இதனுடன் உதிர்த்த உசிலி, வேக வைத்த பீன்ஸ் ஆகியவற்றைக் கலந்து பிரட்டவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதே முறையைப் பின்பற்றி வாழைப்பூ உசிலி, கொத்தவரங்காய் உசிலி ஆகியவற்றையும் தயாரிக்கலாம்.

சென்னா மஷ்ரூம் கிரேவி

தேவை

கொண்டைக்கடலை – 1 கப்

வெங்காயம் – 1

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 2

மஷ்ரூம் – 5

தக்காளி – 2

இஞ்சி – 1 இன்ச்

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலாப் பொடி- 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

செய்முறை

கொண்டைக் கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலை எடுத்து விட்டு அரைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை கழுவி, நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தக்காளி ஜுஸ் ஊற்றவும். பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலை, மஷ்ரூம், மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி சப்பாத்தி, பராத்தாக்களுடன் பரிமாறவும்.

பரங்கிக்காய் கொத்சு

தேவை

பரங்கிங்காய் – 1

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1

மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்

புளி – சிறிது

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

வறுத்து அரைத்த

வெந்தயப் பொடி – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை

பரங்கிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு போட்டு வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் பொடி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின் பரங்கிக்காய், புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி, வெந்தயப் பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும். பரங்கிக்காய் வெந்து கிரேவி திக்கானவுடன் இறக்கவும். சூடாக சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

குடமிளகாய் பச்சடி

தேவை

குடமிளகாய் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 20

புளி – சிறிது

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

கடுகு – 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை

குடமிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும் நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து குடமிளகாயில் ஊற்றி உப்பையும் போட்டு கொதிக்க விடவும். குடமிளகாய் வெந்தவுடன் இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

புதினா சட்னி

தேவை

புதினா – 2 கப்

பெரிய வெங்காயம் – 1

காய்ந்த மிளகாய் – 4

பூண்டு – 2 பல்

புளி -கோலியளவு

தக்காளி – 1

உப்பு – தேவைக்கு

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – 2 சிட்டிகை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். கடைசியாக புதினா, புளி, உப்பு மூன்றையும் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

தேவை

வெள்ளரிக்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொழுப்பில்லா தயிர் - 1 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து அதில் உப்பு, சீரகத் தூள் சேர்த்து, நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

கொண்டைக் கடலை குழம்பு

தேவை

கொண்டைக் கடலை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி -கோலியளவு
குழம்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

வறுத்துப் பொடிக்க

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு

செய்முறை
வறுத்தப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். கொண்டைக் கடலையை 12 மணி நேரம் ஊற வைத்து உப்பு போட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கடலையில் சிறிது எடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி, மிளகாய் பொடி, உப்பு, புளித்தண்ணீர், வேக வைத்த கொண்டைக் கடலை முதலியவற்றை போட்டு கொதிக்க விட்டு குக்கரில் ஒரு சத்தம் விடவும். வெயிட்டை எடுத்து குக்கரைத் திறந்து அரைத்த கடலை, வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி முதலியவற்றை போட்டு ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஜனவரி 2012

Arthritis

பொங்கல்
பொங்கலோ பொங்கல்

சர்க்கரைப் பொங்கல்

தேவை

பச்சரிசி -1 கப்

பாசிப்பருப்பு -1/2 கப்

தண்ணீர் -4 கப்

வெல்லம் -21/2 கப்

ஏலக்காய்பொடி -1/2டீஸ்பூன்

நெய் -3டே.ஸ்பூன்

ஜாதிக்காய் பொடி -1சிட்டிகை

முந்திரி -10

திராட்சை -10

செய்முறை

பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பின் ஒரு குக்கரில் ஊற வைத்த அரிசி, பருப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரைத் திறந்து அரிசி, பருப்பை நன்கு மசித்துக் கொண்டு, வடிகட்டி வைத்துள்ள வெல்லத் தண்ணீரை சேர்த்து சிறிய தீயில் வேக வைக்கவும். நன்கு ஒன்று சேர்ந்து வெந்தவுடன் ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி போட்டுக்கிளறி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பால் பொங்கல்

தேவை

பச்சரிசி -1கப்

பால் -8கப்

தண்ணீர் -1கப்

வெல்லம் -13/4கப்

நெய் -2டே.ஸ்பூன்

முந்திரி -10

திராட்சை -10

செய்முறை

அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன், பச்சரிசியை கழுவி அதில் போடவும். அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலை சிறிது சிறிதாக சேர்க்கவும். அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன், வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி, அரிசியில் ஊற்றவும். அடுப்பை குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துப் போடவும்.

உணவு நலம்

ஜனவரி 2012

மருந்தாகும் இஞ்சி
நம்மிடையே பல்லாயிரம் ஆண்டுகள் உபயோகத்தில் இருந்து வந்துள்ளது இஞ்சி, ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி பல மருந்து தயாரிப்புகளின் மூலப்பொருளாக பயன்பட்டு வருகிறது. பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் படாடோபமான விருந்துகளுக்குப் பின்பு உண்ட உணவு ஜீரணிப்பதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். சீனர்கள் கடல் பயணத்தின் போது தலை சுற்றாமல் இருக்க இஞ்சியை மென்று பயணித்துள்ளனர். இஞ்சி சீனாவிற்கும் ஜமாய்கா நாட்டிற்கும் சொந்தமானது.

மஞ்சள் வகையைச் சார்ந்த கிழங்கு வகையாகும் இஞ்சி. இஞ்சிச் செடி பயன்படுவதில்லை கிழங்குகள் மட்டுமே பயன்தரக்கூடியவை. சமஸ்கிருதத்தில் இஞ்சி-’சிருங்க வேரா’ எனப்படுகிறது.

‘இஞ்சி முரபா’ ‘இஞ்சி முரபா’ என தமிழகத்தின் பஸ் ஸ்டான்ட்களில் எல்லாம் விற்க்கப்படுவது இஞ்சிக்கும் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் பயனையுமே குறிக்கும். இஞ்சி, பயணத்தின் போது ஏற்படக் கூடிய தலைசுற்றல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளைக் கண்டிக்கக் கூடியது. பேருந்துப் பயணம் கடல் பயணம் விமானப் பயணம் என எவ்வகைப் பயணமாக இருப்பினும் கைவசம் இஞ்சியிருப்பது நன்மையே தரும். இஞ்சியை பயணத்தின் போது எடுப்பதை விட அரைமணி நேரம் முன்பாக எடுப்பது நல்ல பயனைத்தரும்.

இஞ்சி மலச்சிக்கலைப் போக்கி எளிதாக மலம் கழியச் செய்திடும். இஞ்சி உணவிற்கு முன்பும் பின்பும் ஜீரண சக்தியை தூண்டிடும். இஞ்சியும் தேனும் ஓர் ஒப்பற்ற மருந்தாகும். வாய்வுத் தொல்லையை போக்கிடும். வயிற்றுப் பொருமல், உப்புசம், ஏப்பம் போன்ற உபாதைகளை போக்கிடும். வயிற்றுக்கு இஞ்சி டீ மிகவும் நல்லது. நல்ல டீ தயார் செய்து அதில் 2 டீஸ்பூன் தோல் சீவிய பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு சிறிது காய்ச்சி பின்பு வடித்து தேன் கலந்து தயார் செய்யப்படுவதே டீயாகும். இது வயிற்றில் ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் மிக நல்லது.

இஞ்சி ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் இதயத்திற்கு இதமளிக்கும் இஞ்சியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். இஞ்சி இளமை உணர்வைத் தரும் பாலுறவில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். அதிக இஞ்சி உபயோகித்தால் காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் எளிதாக கட்டியாகாது.

இஞ்சி ஓர் சிறந்த கிருமி நாசினியாகும். இஞ்சியின் சாறு கிருமிகளை அழிக்கக்கூடியது. இஞ்சியிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் அனேக பூஞ்சக் காளான்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நாம் அன்றாட வாழ்வில் இஞ்சியை சேர்த்து வந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும்.

இஞ்சியில் செய்யக்கூடிய எளிய உணவு வகைகள்

இஞ்சி சாதம்

தேவை

இஞ்சி -1டே.ஸ்பூன்

உளுத்தம்பருப்பு -1டீஸ்பூன்

கடலைப்பருப்பு -1டே.ஸ்பூன்

மிளகாய்வற்றல் -4

மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

புளிக்கரைசல் -1/2கப்

வெல்லக்கரைசல் -2டே.ஸ்பூன்

கடுகு -1டீஸ்பூன்

நல்லெண்ணெய் -2டே.ஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிது

சீரகம் -1/4டீஸ்பூன்

மிளகாய்தூள் -1/2டீஸ்பூன்

சாதம் -2கப்

செய்முறை

இஞ்சியை சிறு சிறு துருவல்களாக துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய அனைத்தையும் தனித்தனியாக வறுத்து கரகரப்பாக அரைக்கவும். எண்ணெய் காய வைத்து கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் இஞ்சியை போட்டு லேசாக வதக்கவும். பின் புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி இஞ்சியுடன் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் அரைத்த பொடியை சேர்த்து வெல்லக்கரைசலையும் சேர்க்கவும். இக்கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பின் அதனை சாதத்தில் போட்டு பிசறி இஞ்சி சாதம் தயாரிக்க வேண்டும்.

இஞ்சி எலுமிச்சை ரசம்

தேவை

இஞ்சி விழுது -1டீஸ்பூன்

எலுமிச்சை -1

தக்காளி -2

மஞ்சள்தூள் -1/4டீஸ்பூன்

துவரம்பருப்பு -1கப்

எண்ணெய் -2டீஸ்பூன்

பச்சைமிளகாய் -2

மிளகாய்வற்றல் -2

தாளிக்க

கடுகு, சீரகம், உப்பு -தேவைக்கு

கொத்தமல்லி -சிறிது

செய்முறை

வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின் இஞ்சி விழுதையும் போட்டு வதக்கவும். பின் கீறிய பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய் போட்டு ஒரு பிரட்டல் பிரட்டி வேக வைத்து மசித்த தக்காளி விழுதையும் போட்டு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும். பின் வேக வைத்த துவரம் பருப்பு, உப்பு, கொத்தமல்லி இலை, எலுமிச்சம் பழ ஜுஸ் சேர்த்து இறக்கவும்.

இஞ்சி ஊறுகாய்

தேவை

இஞ்சி -1/4கிலோ

புளி -1/4கிலோ

மிளகாய்வற்றல் -100கிராம்

சீனி -1/2டம்ளர்

பூண்டு -10பல்

நல்லெண்ணெய் -100கிராம்

கடுகு -1டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு -1/2டீஸ்பூன்

கடலைப்பருப்பு -1/2டீஸ்பூன்

வரமிளகாய் -5

கறிவேப்பிலை -சிறிது

செய்முறை

இஞ்சியை தோல் நீக்கி துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி, புளி, மிளகாய் மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் அரைத்த விழுதை போட்டு கிளறி, பின் சீனியையும் போட்டு கிளற வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.

இஞ்சி சுவை நீர்

தேவை

இஞ்சி (தோல் சீவி நறுக்கியது) -1கப்

எலுமிச்சம்பழம் -1

தேன் -2டீஸ்பூன்

செய்முறை

இஞ்சியை நன்கு அரைத்து அத்துடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம் பழம் பிழிந்து, தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பித்தம் சரியாகும்.

உணவு நலம் ஜனவரி 2012

மூஃபா நிறைந்த உணவு
என்ன சாப்பிடலாம்?

கொலஸ்ட்ரால் உள்ளது, சுகர் உள்ளது என்று மருத்துவர் கூறிய மறு நிமிடம் நாம் கேட்கும் கேள்வி, அப்ப என்ன சாப்பிடலாம்? என்பது தான். நாம் ஏற்கனவே கூறியுள்ளது போல இந்தக் கேள்விக்கு பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு அளவிற்கும் மாறுபடும். எனவே இந்தக் கேள்விக்கு சரியான பதிலளிக்கக் கூடியவர் உங்கள் மருத்துவராக மட்டுமே இருக்க முடியும். இருப்பினும் இங்கு சில பொதுவான கருத்துக்களை எடுத்துரைக்கின்றோம்.

தற்பொழுது மனித இனத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இரண்டு நோய்கள் சர்க்கரை வியாதியும் அதிக கொலஸ்ட்ரால் அளவுமே ஆகும். இவை இரண்டிற்கும் ஒரு ஓற்றுமை உள்ளது. அது சர்க்கரை வியாதி வந்தால் கொலஸ்ட்ரால் வந்து விடும். கொலஸ்ட்ரால் வந்தால் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு அதிகம். இவ்விரண்டுமே நோய்களே அல்ல இவை உடலின் கிரகிப்புத் தன்மையிலும் ஜீரண சீர்கேட்டாலுமே ஏற்படுகின்றன. சர்க்கரை வியாதி உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிசக்தியாக மாற்றி உபயோகிக்க முடியாமை கொலஸ்ட்ரால் என்பது தேவைக்கு அதிகமான கொழுப்பை உடல் தயாரிப்பதும் அதனை இரத்தத்தில் சேமித்து வைப்பதும் ஆகும். இவ்விரண்டு நோய்களையுமே உணவுகட்டுப்பாட்டு முறையால் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

கொலஸ்ட்ராலில் இரு வகை உள்ளது ஒன்று HDL மற்றொன்று LDL இவை இரண்டும் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என கொள்ளலாம். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும் இருக்கும். இதுவே இயல்பு. ஆனால் உணவு மாற்றத்தாலும் உணவுக்கட்டுப்பாடு இன்மையாலும் இந்த நிலை மாறுபட்டு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும் நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும் ஆகிட வாய்ப்பு உள்ளது. இதனை உணவு முறையால் எளிதாக மாற்றிட முடியும்.

மூஃபா என்றால் என்ன?

மூஃபா என்பது மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆஸிட் எனப்படும் நல்ல கொழுப்பு வகை ஆகும். (Mono Unsaturated Fatty Acid – MUFA) இது உடலுக்கு மிகவும் உகந்தது. இதனை உண்பது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இந்த மூஃபா அடங்கிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த மூஃபா அளவிலா நன்மைகளை வழங்கினாலும் அவற்றில் சில முக்கியமானவை

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

இன்சுலினை உடல் உபயோகிக்க உதவும்

தொப்பை விழுவதை குறைக்கும்

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும்

சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்களுக்கு உதவி செய்யும்

சர்க்கரை வர வாய்ப்புள்ளவர்களுக்கு வருவதை தள்ளிப் போடும்

புற்றுநோயை வருவதை தடுக்கும்.

இத்தனை நன்மைகளை வாரி வழங்கும் இந்த மூஃபா நிறைந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட வேண்டும்? இது ஒரு சிந்திக்க வேண்டிய கேள்வி. நன்மைகள் பல தரும் இவை அடங்கிய உணவுகளை அதிகமாகவும் உண்ணக்கூடாது. தேவை என எண்ணி ஒரு நாள் அதிகமாக உண்பதும் பின் பல நாட்கள் உண்ணாமல் இருப்பதும் முறையல்ல இவைகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்வது அவசியம். அளவை மீறி அதிகமாக உண்பது கெட்ட கொலஸ்ட்ராலையும் கூட்டிடும் உடல் நலக்கேடுகளை உண்டாக்கும். சரி, மூஃபா அதிகம் உள்ள உணவு என்ன? மூஃபா அதிகமுள்ள உணவுகள், தாவர எண்ணெய்கள், கொட்டைகள் மற்றும் சாக்லேட்டுகள்.

தாவர எண்ணெய்கள்

எண்ணெய்கள் என்று சொல்வது சமையலுக்கு உபயோகிக்கும் அனைத்து எண்ணெய்களையும் குறிக்கும். அவை நல்லெண்ணெய், கடலெண்ணெய், ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், ஃப்ளாக்ஸ் விதை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை. இவைகளில் சிறந்தது என்று பார்த்தால் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஃப்ளாக்ஸ் விதை எண்ணெய் அடுத்து வருவது நமது நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஆகும்.

இந்த மூஃபா அடங்கிய எண்ணெய்களை சமைக்காமல் பச்சையாக உண்ண நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இவை சமைக்கும் பொழுது பெரிதும் தங்களது நற்குணங்களை இழந்து விடுகின்றன. இந்த வகை மூஃபா அடங்கிய எண்ணெய்களை தினசரி குறைந்த அளவில் உண்பது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இவற்றை மருந்து போல குறைவாக உண்ண வேண்டும். தினசரி உண்ண வேண்டும் அவ்வாறு உண்ணும் பொழுது சர்க்கரை அளவை 30 சதிவிகிதம் வரை குறைக்கின்றது. இவ்வாறு குறைப்பதால் இது சர்க்கரை வியாதி உடையவர்களது மருந்து தேவை குறைகிறது. மருந்து எடுக்காமல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர் களுக்கு சர்க்கரை அளவு எளிதாக கட்டுப் படுகிறது. இவ்வகை எண்ணெய்களில் ஏதாவது ஒன்றை நாள் ஒன்றுக்கு 5 மிலி வரை காலை உணவிற்கு பின்பு உண்பது நன்மையை தரலாம். இது உங்கள் உடலுக்கு எவ்வாறு உதவும் என்பதனை உங்களது மருத்துவரை ஆலோசித்து பின் உண்டு பரிசோதித்துக் கொண்ட பின்னரே முடிவிற்கு வர இயலும்.

கொட்டைகள் (விதைகள்)

பல கொட்டைகளிலும் விதைகளிலும் மூஃபா அதிகமாக காணப்படுகின்றது. இவ்வகை கொட்டைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது சுழற்சி முறையில் ஏதாவது ஒரு விதையை உண்பது நன்மை தரலாம். அதிக மூஃபா அடங்கிய கொட்டைகள் மற்றும் விதைகள் பாதாம், அக்ரூட் எனப்படும் வால்நட், எண்ணெய் இல்லாமல் வறுத்த முந்திரி, பிஸ்தா, பரங்கி விதை, நிலக்கடலை போன்றவை ஆகும். இவற்றில் சிறந்தது பாதாம் மற்றும் வால்நட் இவற்றை அளவுடன் உண்பது தினசரி மருந்து போல உண்பது மிக மிக அவசியம். மிகவும் கவனம் தேவை. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒன்றிரண்டு உண்பதே நன்மை தரும். அதிகம் உண்பது கேடுகளை விளைவிக்கும். ஒன்றிரண்டு பாதாம் அல்லது ஒரு வால் நட்டை மாலை நேரம் உண்ணலாம். தொடர்ந்து உண்பதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பதும் பின் பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.

அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் கவலையின்றி இவற்றில் ஏதாவது ஒன்றை உண்ணலாம். இவ்வகை கொட்டைகளில் அதிக நார்ச்சத்து, புரதம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை கிடைக்கின்றன.

சாக்லேட்கள்

அதிக கொகோ அடங்கிய கறுநிற சாக்லேட்களும் அதிக மூஃபா அடங்கியவை இவற்றில் குறைவான சர்க்கரை அளவு இருக்க வேண்டும். சர்க்கரை அளவு அதிகமாக இருப்பின் நன்மைகளை விட தீமைகளே அதிகம் கிடைக்கும். இந்தியாவில் மிகச் சில சாக்லேட்டுகளே இவ்வகையைச் சார்ந்தவை அவற்றை தேடி தேர்வு செய்வது மிக அவசியம். இவ்வகை கறுநிற சாக்லேட்டுகள் (Black chocolates) இதயத்திற்கு இதமானவை. இவை இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன, இதய தாக்கு வருவதை தடை செய்கின்றன. மீண்டும் கவனம் தேவை. இவற்றை அளவுடன் சிறிதளவு 5-10 கிராம் அளவில் தினசரி மதியம் உணவிற்கு பின்பு உண்பது நன்மையை தரலாம். உங்களுக்கு இது எப்படி ஒத்துக் கொள்கின்றன. இதன் நிலை என்ன என்பதை மருத்துவரும், பரிசோதனைகளுமே தெளிவுப்படுத்த முடியும்.

உணவு உண்பதில் கவனமாகவும் அக்கறையுடனும் இருந்தால் எவ்வகை நோயையும் எளிதாக எதிர் கொள்ளலாம். உண்ணுகின்ற உணவில் என்ன இருக்கிறது என்ன நன்மை, தீமை என்பதனை அறிந்து கொள்வது அவசியம். நல்லது என்றவுடன் அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். கெட்டது என்றவுடன் ஒதுக்குவது அவசியம். இந்த எண்ணத்துடன் நாம் உணவை தேர்வு செய்தால் ஆரோக்கியம் நமதே.

உணவு நலம் ஜனவரி 2012

வெங்காய சூப்
வெங்காயம் உலகெங்கும் புகழ் பெற்று விளங்குவது வெங்காயம் ஆகும். உலகெங்கும் அனைவராலும் உணவில் பயன்படுத்தப் படுவது வெங்காயம். இதனை தாவரவியலில்Allium cepa என அழைக்கின்றோம்.

தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வெங்காயம் உபயோகத்தில் இருந்திருப்பதை உறுதி செய்கின்றனர். உலகின் தொன்மையான ஆய்வுகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே எகிப்தியர்கள், வெங்காயத்தைப் பயன்படுத்தி யுள்ளதைக் குறிக்கின்றது.

வெங்காயம் மிகவும் குறைவான எரிசக்தி கொண்டவை. மேலும் அதில் மிகவும் குறைவான அளவு கொலஸ்ட்ரால், கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அக்கரை கொண்ட நடுவயதைக் கடந்தவர்களுக்கு வெங்காயம் ஒரு சிறந்த உணவாகும். (ஆனால் அதே சமயம் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்களை அதிகம கொண்டது).

வெங்காயம் கிருமி நாசினி குணம் கொண்டது. கிருமிகளை எதிர்க்கக் கூடியது. உடலின் செயல்பாட்டைத் தூண்டக் கூடியது. வெங்காயமும் பூண்டைப் போல நல்ல குணங்களையும், பயனையும் தரக்கூடியது. சர்க்கரை நோய் உடையவர்களுக்கு மிகவும் நல்லது. வெங்காயம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கக் கூடியது. எலும்புச் சிதைவை தவிர்க்கக் கூடியது. வெங்காயச்சாற்றை தேனில் கலந்து உட்கொண்டு வர சளி வெளியேறி சுவாச மண்டலம் சீரடையும். தொடர்ந்து வெங்காயம் அதிகமாக உபயோகித்து வந்தால் அது இரத்த அழுத்தத்தையும் சீர்படுத்துகின்றது.

வெங்காய சூப்

வெங்காயத்தை எப்பொழுதும் போல உட்கொள்வதை விட வித்தியாசமாக வெங்காய சூப் செய்து ருசித்துப் பாருங்களேன்.

தேவை

பெரிய வெங்காயம் – 3

வெண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்

காய்கறி வேக வைத்து

வடித்து எடுத்த தண்ணீர்- 4டம்ளர்

மிளகுத்தூள் – தேவைக்கு

உப்பு – தேவைக்கு

காய்ந்த ரொட்டித்துண்டுகள் – சில

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை விட்டு அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு ஒரிரு நிமிடம் நன்கு வேக விடவும். பின் மூடி வைத்து 15 நிமிடம் நன்கு வேக விடவும். பின் மூடியைத் திறந்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வேக விட்டு பின்பு காய்கறி வேக வைத்த நீரை விட்டு நன்கு கொதி வந்தவுடன் இறக்கி மிளகுப்பொடி, உப்பு சேர்த்து பரிமாறலாம்.

திருமதி சந்திரகலா. சென்னை – 40

உணவுநலம் ஜனவரி 2012